Latestமலேசியா

பிக்ஆப் வாகனத்தில் பெண்ணின் சடலம் குற்றவியல் அம்சங்கள் இல்லை

கோலாலம்பூர், செப் -26,

ஸ்தாப்பாக் Diamond Square வர்த்தகப் பகுதிக்கு அருகே ஒரு Pikap வாகனத்தில் பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லையென வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் லாஷிம் இஸ்மாயில் ( Mohd Lazim Ismail ) தெரிவித்தார். அந்த 58 வயதுடைய பெண் மலேசிய பிரஜை அல்ல என தெரியவந்துள்ளது.
அப்பெண் கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு திரும்பவில்லையென அவரது உடலை அடையாளம் காட்டிய அவரது பிள்ளை தெரிவித்தார்.

புதன்கிழமை காலை 9 மணியளவில் அப்பெண்ணின் உடலில் சவப் பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும் அவரது மரணத்திற்கு இன்னும் காரணம் கண்டறியப்படவில்லை. அவர் உடல் காணப்பட்ட pikap வாகனமும் அவருக்கு சொந்தமானது அல்ல என்பதோடு ,கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த வாகனம் செயல்படாமல், அதன் கதவும் பூட்டப்படாமல் இருந்துள்ளது. அப்பெண்ணின் இறப்பு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக முகமட் லாஷிம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!