பிட்டத்தை ‘அழகாக்கும்’ அறுவை சிகிச்சை தோல்வி; பெண்ணுக்கு RM 308,000 இழப்பீடு

மலாக்கா – ஆகஸ்ட்-30 – தனது பிட்டத்தை ‘அழகாக்கும்’ ஆசையில் அறுவை சிகிச்சை முயற்சியில் இறங்கி அது தோல்வியில் முடிந்த பெண்ணுக்கு, இழப்பீடாக 308,000 ரிங்கிட்டை வழங்க மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 34 பெண்ணுக்கு, வலி வேதனைக்காக 150,000 ரிங்கிட்டும் 3,200 ரிங்கிட் அறுவை சிகிச்சை செலவுத் தொகையாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வுக்கு 54,834 ரிங்கிட்டும், வருங்கால சிகிச்சைக்கு 50,000 ரிங்கிட்டும் என வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு அழகு மற்றும் சரும பராமரிப்புத் தொழில் துறையில் சட்ட விதிகளை மீறியதற்கு ஒரு படிப்பினையாக இருக்கும் வகையில், 50,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கவும் Lai Ching Nee என்ற பெண்ணும், Amyza Let Beauty நிறுவனமும் உத்தரவிடப்பட்டன.
Lai Ching Nee அந்த அறுவை சிகிச்சையை செய்யும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை.
அவர், அழகியல் நிபுணர் என்றோ சான்றிதழ் பெற்ற மருத்துவர் என்றோ அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் என்றோ நீதிமன்றத்தில் எந்த இடத்திலும் நிரூபிக்கப்படவில்லை என்பதை நீதிபதி சுட்டிக் காட்டினார்.
அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததால், பாதிக்கப்பட்ட பெண் பிட்டத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு பினாங்கில் 2 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.