
ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 11 – பினாங்கு, ஆயர் ஈத்தாம் , கம்போங் மிலாயுவில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் வேலியில் ஏறிய ஒருவரின் கை 0.3 மீட்டர் நீளமுள்ள இரும்பினால் துளைக்கப்பட்தால் அவர் பெரும் அவதிக்கு உள்ளானார்.
இன்று காலை மணி 5.29 க்கு இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக Paya Terubong தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவுக்கான கமாண்டர் முகமட் ஷாபிஷானி முகமட் ரோஸ்லி ( Mohamad Syafizani Mohd Rosli ) தெரிவித்தார். அந்த வீட்டை கடந்துச் சென்ற பொதுமக்கள் இந்த சம்பவத்தைக் அறிந்து தியணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றடைந்தபோது , அந்த நபரின் வலது கை சுமார் 0.3 மீட்டர் நீளமுள்ள இரும்பினால் துளைக்கப்பட்டதை தீயணையப்புப் படை வீரர்கள் கண்டதோடு சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி சுமார் 10 நிமிடங்களில் அவரது கையிலிருந்த இரும்பை வெளியே எடுத்தனர்.
அந்த ஆடவருக்கு தீயணைப்பு மீட்புத்துறையின் அவசர மருத்துவ சேவைகள் பிரிவின் உறுப்பினர்கள் தொடக்கக் கட்ட சிகிச்சை அளித்து உடனடியாக மேல் நடவடிக்கைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பொதுமக்கள் கவனிக்கப்படுவதற்கு முன்பு அந்த நபர் எவ்வளவு நேரம் வேலியில் சிக்கிக்கொண்டார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்த ஆடவர் ஆளில்லாத வீட்டிற்குள் நுழைந்ததன் நோக்கத்தை விசாரிக்க இந்த விவகாரம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் ஷாபிஷானி கூறினார்.