Latest

பினாங்கில் உடலில் காயங்களுடன் 5 வயது சிறுவன் மரணம்: தாயும் அவரது காதலரும் கைது

ஜார்ஜ்டவுன், ஜூலை-24-பினாங்கு, Gelugorரில் உடல் முழுவதும் காயங்களுடன் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பில் அவனது தாயாரும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களைக் கணவன்-மனைவி எனக் கூறிக் கொண்ட 30 வயதான இந்தோனேசியப் பெண்ணும் 34 வயதான வங்காளதேச ஆடவரும் விசாரணைக்கு உதவ ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை, Gelugorரில் உள்ள தங்களின் வாடகை வீட்டில் சிறுவன் வாந்தி எடுப்பதைக் கண்ட, வேலையில்லாத அந்த வங்காளதேச நபர் மூலம் அச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

சிறுவனின் தாயார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அந்நபர் சிறுவனை அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும், சுயநினைவை இழந்த சிறுவன், பின்னர் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் மரணமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அச்சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்புகாரைத் தொடர்ந்து, உணவக உதவியாளராகப் பணி புரியும் அப்பெண்ணும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த சிறுவன், சம்பந்தப்பட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கும் கடந்தாண்டு காலமாக விட்ட அவரது Rohingya கணவருக்கும் பிறந்த மகன் என அறியப்படுகிறது.

மேலதிக நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் முன், சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காவல் துறை காத்திருக்கிறது.

பினாங்கு மாநில காவல் துறைத் தலைவர் Datuk Dennis Lim அச்சம்பவம் குறித்து இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!