
கோலாலம்பூர், ஏப் 7 – பினாங்கிற்கு அருகில் உள்ள மாரா அறிவியல் இளநிலை கல்லூரி விடுதியில் பகடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அவர்கள் அந்த கல்லூரியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பகடிவதை விவகாரத்தில் தனது தரப்பு சமரசம் செய்துகொள்ளாது என்பதோடு , சம்பந்தப்பட்ட மாணவர்கள் விசாரணையில் தலையிடமால் இருப்பதற்காக இந்த நடவடிகக்கை எடுக்கப்பட்டதாக மாராவின் தலைவரான Datuk Dr Asyraf Wajdi தெரிவித்தார்.
இந்த விசாரணை செயல்பாட்டில், சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் முதலில் இடைநீக்கம் செய்ய வேண்டும் . எனவே விசாரணை செயல்முறையில் அவர்களது தலையீடு இருக்காது. இரண்டாவதாக இந்த பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தெளிவான செய்தியைக் கொடுக்க வேண்டும்.
பகடிவதை நடந்தது மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் குற்றம்புரிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று பிற்பகல் முகநூலில் பதிவேற்றிய காணொளியில் Asyraf Wajdi கூறினார்.