Latestமலேசியா

பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் சிறார் பாலியல் குற்றங்கள்; இரு தரப்பையுமே தண்டிக்க சட்டத் திருத்தம் அவசியம் – கிளந்தான் போலீஸ் பரிந்துரை

கோத்தா பாரு, செப்டம்பர்-22,

வயது குறைந்தவர்களை உட்படுத்திய பாலியல் குற்றங்கள் குறிப்பாக பரஸ்பர இணக்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும்.

கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் Datuk Mohd Yusoff Mamat அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

கிளந்தானில் பதிவான சிறார் பாலியல் சம்பவங்களில் சுமார் 90 விழுக்காடு சம்பவங்கள் இருவரது சம்மதத்துடன் தான் நடந்துள்ளது, வற்புறுத்தலால் அல்ல என்றார் அவர்.

ஆனால், நடப்புச் சட்டங்கள் ஆண்களை மட்டுமே குற்றவாளி எனக் கருதி தண்டிக்கின்றன; உறவுக்கு பெண்களும் உடன்பட்டிருந்தாலும், அவர்கள் “பாதிக்கப்பட்டவர்கள்” எனக் கருதப்படுகிறார்கள்.

இந்த ஒரு சார்பு நிலையை மாற்றி, இரு தரப்புமே பொறுப்பேற்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதே சமயம், பெற்றோர், ஆசிரியர்கள், மத நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்புகள், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு வழியாக இந்த சிறார் பாலியல் சம்பவங்களைத் தடுப்பநில் பங்காற்ற பங்கெடுக்க வேண்டும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!