
தாசேக் குளுகோர், மார்ச்-8 – பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செப்பாடு ஜெயாவில் நாசி கண்டார் உணவகத்தில் பாராங் கத்தி ஏந்திய நால்வர் தாக்கியதில், மியன்மார் ஆடவர் கொல்லப்பட்டார்.
அக்கொடூரச் சம்பவம் நேற்று அதிகாலை நிகழ்ந்தது.
கொல்லப்பட்டவர் அந்த உணவகப் பணியாளர் என நம்பப்படுகிறது.
தொப்பியும் முகமூடியும் அணிந்தும் அடையாளம் தெரியாத கருப்பு நிறக் காரில் வந்திறங்கிய அந்நால்வரும், அந்த மியன்மார் ஆடவரை சரமாரியாக வெட்டினர்.
அந்நபர் தப்பியோட முயன்ற போது, விரட்டிச் சென்று தலை, கை மற்றும் முதுகில் அக்கும்பல் வெட்டியுள்ளது.
வெட்டுப் பட்டவர் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வேளை, அக்கும்பல் வந்த காரிலேறி தப்பிச் சென்றது.
சம்பவத்தை பலர் நேரில் பார்த்துள்ளனர்.
அவர்களின் உதவியோடு சந்தேக நபர்களைத் தீவீரமாகத் தேடி வருவதாக, செபராங் பிறை உத்தாரா போலீஸ் கூறியது.
கொல்லப்பட்டவரின் உடல் சவப்பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.