
செர்டாங், அக்டோபர்-6, சிலாங்கூர், செர்டாங், தாமான் புக்கிட் செர்டாங் ஸ்ரீ கெம்பாங்கானில் Perodua Kancil கார் தீப்பற்றியதில், 80 வயது ஓட்டுநர் உடல் கருகி பலியானார்.
Jalan BS 9-ல் சனிக்கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதில் உடலில் 90 விழுக்காடு தீப்புண் காயங்கள் ஏற்பட்டு, அம்முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகலறிந்து விரைந்த ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு மீட்புத் துறை, அவரின் உடலை எரிந்த காரிலிருந்து மீட்டு மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.