
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-பெண் போலீஸை காலால் எட்டி உதைத்தக் குற்றத்திற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப் பயணியான 34 வயது பெண்ணுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஜனவரி 14-ஆம் தேதி, பினாங்கில் உள்ள ஒரு காப்பி கடையில் நிகழ்ந்தது.
போலீஸ் அதிகாரி தனது கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அதனைத் தடுக்கும் விதமாக Schlefsky Theresa அவரை வயிற்றில் காலால் உதைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, Thresa-வின் வழக்கறிஞர், வெறும் அபராத்தை மட்டுமே தண்டனையாக விதிக்குமாறு நீதிபதியிடம் முறையிட்டார்.
Theresa, சிறு வயதிலிருந்தே மனநல பிரச்சினையான skizofrenia-வால் பாதிக்கப்பட்டவர் என்றும், மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளாததால் நடந்த தவறுக்கு அவர் வருந்தி, போலீஸ் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிமன்றம், அவருக்கு அந்த அபராதத் தொகையை விதித்தது;
கட்டத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுமென நீதிபதி அறிவித்த நிலையில், அபராதத்தை உடனடியாகச் செலுத்தி சிறைத் தண்டனையை அப்பெண் தவிர்த்தார்.



