ஜோர்ஜ் டவுன், நவ 21 – பினாங்கு தீவின் வடக்கே கடற்கரைப் பகுதிக்கு அருகேயுள்ள சுமார் 37,000 பயனீட்டாளர்கள் அடுத்த வியாழக்கிழமை 14 மணி நேரம் நீர் விநியோக தடையை எதிர்நோக்குவார்கள். திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை அடுத்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் மதியம் வரை தொடரும் என பினாங்கு நீர் விநியோகிப்பு கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. Batu Ferringhi நீர் சுத்திகரிப்பு மையத்தின் நுழைவாயில் குழாய்களில் ஒன்றில் 900mm Sluice வால்வு பழுதடைந்ததால், அதற்குப் பதிலாக புதிய 900mm வால்வு பொருத்தப்படவுள்ளது.
பாதிக்கப்படும் பயனீட்டாளர்கள் , நீர் விநியோக சேவைகள் சீராகும் வரை இரவிலும் மறுநாள் காலையிலும் பயன்படுத்துவதற்காக தண்ணீரை சேமித்து வைக்குமாறு பினாங்கு நீர் விநியோக கழகம் வலியுறுத்தியது . Bagan Jermal, Tanjung Pinang, Batu Ferringhi, Tanjung Tokong, Mount Erskine, Teluk Bahang மற்றும் Tanjung Bungah ஆகிய பகுதிகள் நீர் விநியோக தடையின் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது