Latestமலேசியா

பினாங்கு MACC இயக்குநராக டத்தோ கருணாநிதி பொறுப்பேற்பு

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-16 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளையின் புதிய இயக்குநராக டத்தோ எஸ். கருணாநிதி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதுநாள் வரை சபா MACC-க்குத் தலைமையேற்றிருந்தார்.

பினாங்கு MACC இயக்குநராக இருந்த Datuk Mohd Fuad Bee, சபாவில் கருணாநிதியின் இடத்தை நிரப்புகிறார்.

இருவருக்கும் இடையிலான பதவி ஒப்படைப்புச் சடங்கு, MACC-யின் உளவுப் பிரிவின் மூத்த இயக்குநர் Datuk Saiful Ezra Arifin முன்னிலையில் பினாங்கு MACC தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

சபா MACC-க்கு தலைமையேற்ற காலத்தில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை முறியடிப்பதில் மிகவும் தீவிரம் காட்டியவர் கருணாநிதி.

இதனால் மாநில மக்கள் மத்தியில் பிரபலமானவராகவும் MACC அதிகாரிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவராகவும் அவர் வலம் வந்தார்.

அவரின் அதே வேகம் பினாங்கிலும் தொடர வாழ்த்துவோம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!