
மூவார், ஜூன்-2 – ஜோகூர் மூவார் அருகே PLUS நெடுஞ்சாலையில் Toyota Alphard MPV வாகனம் பின்னாலிருந்து Proton Saga காரை மோதியதில், அதிலிருந்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
படுகாயமடைந்த Ayesha Sofea Anwaruddin, 2 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி புதன்கிழமை காலை உயிரிழந்தாள்.
மே 26-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு Ayesha-வின் குடும்பம் பயணித்த கார் நெடுஞ்சாலையின் இடப்பக்கமாக போய்க்கொண்டிருந்தது.
இந்நிலையில் பின்னாலிருந்து Toyota Alphard மோதும் காட்சி, வைரலாகியுள்ள dashcam பதிவில் தெரிகிறது.
MPV கட்டுப்பாட்டை இழந்து காரை மோத, அந்த Proton Saga தடம்புரண்டு சாலைத் தடுப்பில் மோதியது.
காரோட்டி மற்றும் இதர இரு பயணிகளும் அதில் காயடைந்தனர்.
Toyota Alphard ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பது உறுதியானதாக, மூவார் போலீஸ் கூறியது.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு வந்துதவுமாறும் போலீஸ் கேட்டுக் கொண்டது