Latestமலேசியா

இரத்த காயத்துடன் பெண் இறந்து கிடந்தார் ஆடவர் கைது

இரத்த காயத்துடன் பெண் இறந்து கிடந்தார் ஆடவர் கைது

கோலாலம்பூர், பிப்ரவரி-10,

ஜாலான் செந்துலில் வீடு இல்லாத பெண் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டுப்பிடித்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன் காலை மணி 7.20 அளவில் தலையில் இரத்தக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் இறந்து கிடந்ததாக தங்கள் தரப்புக்கு தகவல் கிடைத்ததாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அகமட் சுகர்னோ முகமட் ( Ahmad Sukarno Mohd Zahari ) தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றடைந்த போலீசார், தலையில் இரத்தக் காயத்துடன் பெண் ஒருவர் படுத்திருந்ததகாவும் , தலையின் வலதுபுறம் 4 சென்டிமீட்டர் ஆழத்திற்கு காயம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதோடு காதின் மேல் பாகத்திலும் காயம் இருந்ததோடு அவரது கண் பகுதியும் வீங்கியிருந்ததாக அகமட் சுகர்னோ கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் அப்பெண் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவும் பொருட்டு 46 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் அகமட் சுகர்னோ தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!