
கோலாலம்பூர், ஆகஸ்ட்-10 – பிரிக்ஃபீல்ட்ஸ், அருகே Jalan Stesen Sentral-லில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில், இரும்புக் கம்பு மற்றும் பாராங் கத்தியேந்திய 2 ஆடவர்களுடன் நிகழ்ந்த சண்டையில், 2 ஆடவர்கள் காயமடைந்தனர்.
சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த அச்சம்பவம் வைரலான நிலையில், 30 வயது மதிக்கத்தக்க 2 சந்தேக நபர்களை போலீஸ் தேடி வருகிறது.
இருவரும் அடையாளம் காணப்பட்டு விட்டனர்; எனவே விசாரணைக்காக சரணடைவதே அவர்களுக்கு நல்லது என, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் Ku Mashariman Ku Mahmood கூறினார்.
பாதிக்கப்பட்ட முதல் நபருக்கும் முதல் சந்தேக நபருக்கும் இடையில் இரவு விடுதி அருகேயுள்ள சாலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் இரண்டாவது சந்தேக நபர் இரும்புக் கம்பு மற்றும் பாராங் கத்தியிடன் வந்து தாக்கினார்.
பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் பின்னர் தாக்கப்பட்டார்.
தாக்கியவர்கள் தப்பியோடிய நிலையில், காயமடைந்த இருவரும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரும்புக் கம்பு மற்றும் பாராங் கத்தியால் அவர்கள் தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய 26 வினாடி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.
சம்பவ இடத்திலிருந்த பொது மக்கள் அதனை வீடியோவில் பதிவுச் செய்ததாக தெரிகிறது.