Latestமலேசியா

பிரிந்திருக்கும் மகளை இந்திரா காந்தி மீண்டும் சந்திப்பாரா? போலிஸ் படைத்தலைவருடன் எதிர்ப்பார்க்கப்படும் சந்திப்புப் பதில் தருமா?

கோலாலம்பூர், நவம்பர்-23 – இந்திரா காந்தி 16 ஆண்டுகளாக பிரிந்துள்ள மகள் பிரசன்னா தீக்ஷாவை மீண்டும் சந்திப்பாரா? — இந்தக் கேள்வி மனசாட்சி உள்ள மலேசியர்களின் மனதை இன்றும் வாட்டுகிறது.

அந்த நம்பிக்கையைத் தான் இந்திரா நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு கொண்டுச் சென்றார்.

தனது மகளின் Teddy Bear கரடி பொம்மையை ஓர் அடையாள நிகழ்வாக தேசியப் போலீஸ் படைத்தலைவரிடம் ஒப்படைத்து, மகளைத் தாயுடன் இணைத்து வைக்குமாறு நீதிமன்றம் இட்ட உத்தரவு ஏன் இதுவரை நடக்கவில்லை என்று கேட்கவே அவர் மணிக்கணக்கில் காத்திருந்தார்.

ஆனால்… IGP Datuk Seri Mohd Khalid Ismail கடைசி வரை வரவே இல்லை…

நீதிமன்ற தீர்ப்புகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கும், சொந்த மகளைக் காண 16 ஆண்டுகளாக போராடும் ஒரு தாயைச் சந்திக்கத் தவறியதற்கும், இந்திராவின் வழக்கறிஞர் என். ராஜேஷ், IGP-யை கடுமையாக விமர்சித்தார்.

எனவே உள்துறை அமைச்சரே தலையிட்டு, IGP-யை கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

புக்கிட் அமானின் முன் சாலையில் அமர்ந்தபடி, கண்ணீர் மல்க இருந்த இந்திரா, “நாங்கள் போலீஸுடன் தர்கம் செய்வதற்காக வரவில்லை… பிரசன்னாவைத் தேடுகிறோம். என்னைச் சந்திக்கவே IGP ஏன் தயங்குகிறார்?” என்று வேதனையுடன் கேட்டார்.

ஏற்கெனவே முன்னறிவிப்பு கொடுத்தும், தனது நேரத்தை மாற்றத் தயார் என்றும் தெரிவித்தும், ஏன் ஒரு சந்திப்பு தேதியைக்கூட வழங்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுவான Ingat-டின் தலைவர் அருண் துரைசாமி, IGP புக்கிட் அமானுக்கு வருவதாக தகவல் இருந்ததாகவும், ஆனால் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

IGP வரும் வரை நகரப் போவதில்லை எனக் கூறி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையிலேயே அவர்கள் அமர்ந்திருந்தனர்.

துணையமைச்சர் எம். குலசேகரன், சில வாரங்களில் IGP-யுடனான சந்திப்பை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த பின்னரே கூட்டம் கலைந்தது.

தான் மதம் மாறி, தனது குழந்தைகளையும் ஒருதலை பட்சமாக மதம் மாற்றியத் தந்தையால், வெறும் 11 மாதக் கைக்குழந்தையாக இருக்கும் தாயிடமிருந்து பிரித்துச் செல்லப்பட்டவர் பிரசன்னா…

அடுத்தாண்டு ஏப்ரலில் பிரசன்னாவுக்கு 18 வயதாகின்றது…அந்தளவுக்கு நேரம் விரைந்து சென்று கொண்டிருக்கிறது.

ஆனால்… இந்திரா தனது மகளை மீண்டும் சந்திப்பாரா? என்ற முக்கியக் கேள்விக்கு இன்னும் விடையில்லை…

அதற்கான பதில்… IGP-வுடனான சந்திப்புக்குப் பிறகு கிடைக்குமா என இந்திரா காந்தி குடும்பம் காத்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!