
பெய்ஜிங், ஜூலை 29 – மூன்று வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் குழந்தை பராமரிப்பு மானியத்தை அறிவிப்பதன் மூலம் நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா முயற்சிகளை எடுத்து வருகின்றது.
பெரும்பாலான இளைஞர்கள் அதிக குழந்தைகளைப் பெற்று கொள்வதற்கு தயங்குவதால் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகின்றது என்று உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிக செலவு, வேலை நிச்சயமற்ற தன்மை மற்றும் மந்தமான பொருளாதாரம் ஆகியவை நாட்டில் பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதையும் குடும்பத்தைத் தொடங்குவதையும் தடுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இந்தத் திட்டத்தை “தேசிய அளவில் முக்கியமான நலக் கொள்கை” என்று விவரித்துள்ள நிலையில், இந்த நேரடி பண உதவி, பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.