
பினாங்கு, மார்ச் 6-பினாங்கில் புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு அருகிலுள்ள இந்து கோயில் விவகாரத்தில் எந்தவொரு தரப்பினரும் தாங்களாகவே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் சட்டத்திற்கு மதிக்க வேண்டும் என்பதோடு , நாட்டின் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல் செயல்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் அரசாங்கம் அமைதியாக இருக்காது என நேற்று தலைநகரில் நடந்த Kesuma Perkeso Lindung நிகழ்ச்சியில் பேசியபோது ரமணன் நினைவுறுத்தினார்.
அதே நேரத்தில், இந்த பிரச்சினையை ஒரு மதப் பிரச்சினையாக பார்க்காமல் , மாறாக சட்டம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்குவதன் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



