Latestமலேசியா

புக்கிட் ராஜாவில் போலி MyKad வைத்திருந்த 46 வெளிநாட்டவர்கள் கைது

கிள்ளான், ஏப்ரல்-9-கிள்ளான், புக்கிட் ராஜாவில் மேற்கொள்ளப்பட்ட Ops Roda திடீர் சோதனையில் 46 வெளிநாட்டவர்கள் போலி MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதன் பேரில் பிடிபட்டனர்.

தேசியப் பதிவிலாகாவான JPN, குடிநுழைவுத் துறை மற்றும் ஆள்பல துறை இணைந்து நடத்திய இச்சோதனையில் 136 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

அவர்களில் 25 பெண்கள் உட்பட 46 வெளிநாட்டவர்கள் போலி அடையாள அட்டையுடன் வேலை செய்ததாக கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்கள் இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

சிலர் தப்பிக்க முயற்சித்ததோடு, பெட்டிக்குள் மறைந்து அதிகாரிகளை ஏமாற்ற முயன்றனர்.

இந்நிலையில், இந்த போலி ஆவணங்களை வழங்கும் முகவர்களை கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக, JPN அமுலாக்க இயக்குநர் Mazhad Abdul Aziz கூறினார்.

“போலி ஆவணங்கள் பயன்படுத்துவது சட்டவிரோதம் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து என்பதால், JPN கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!