
கோலாலம்பூர், மார்ச் 12 – Puncak Jalilலில் காட்டுத் தீக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, அதே வேளையில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் எதுவும் இல்லையென்று தெரிவிக்கப்பட்டது.
Seri Kembanganனுக்கு அருகிலுள்ள Puncak Jalil மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கை இன்று அதிகாலை 4 மணிக்குள் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நேற்று மாலை மணி 4.12 மணியளவில் தொடங்கிய தீ, சுமார் 37 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மலைப்பாங்கான காடுகளை உள்ளடக்கியதாக மலேசிய தீயணைப் மற்றும் மீட்புத்துறை அறிவித்தது.
புதிதாக தீ ஏற்படக்கூடிய அறிகுறி எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்யும் கண்காணிப்பு கட்டத்தில் இந்த நடவடிக்கை இப்போது இருப்பதாக கூறப்பட்டது.
இந்த காட்டுத் தீ சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.



