
வாஷிங்டன், ஏப்ரல்-11-பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் புதிய இராணுவ தாக்குதல்களை தொடங்க தயார் என, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதற்காக அமெரிக்கப் போர் கப்பல்கள் ஆயுதங்களுடன் தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.
“ஆயுதங்கள் அனைத்தும் நாங்கள் செய்ததிலேயே மிகச் சிறந்தவை. அவற்றை அனுப்பினால் மொத்த இலக்கும் சிதறி சின்னாபின்னமாகி விடும்” என்றார் அவர்.
இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தராக விளங்கும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இன்று அந்த முக்கியப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
அதில், ஈரானிய அதிகாரிகள், பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif-பை சந்திக்கின்றனர்.
இது, அண்மைய மோதல்களுக்கு பிறகு அமைதியை ஏற்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஆனால், Hormuz நீரிணைத் திறப்பு உட்பட சில முக்கிய பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை.
ஈரானும், லெபனானில் நடக்கும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தங்களது முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரங்களில் நிலவரம் தெரிந்து விடும் என ட்ரம்ப் சொன்னார்.
பேச்சுவார்த்தைக்காக, 2-வார போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஒப்பந்தம் வேண்டுமா அல்லது தாக்குதல் வேண்டுமா?” என்ற ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.



