Latestமலேசியா

புதிய பாடத்திட்டங்களில் தாமதம் வேண்டாம்; தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு விரைவான மாற்றம் அவசியம் – அன்வார்

பெங்கெராங், ஏப்ரல்-6-புதியப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த கல்வி நிறுவனங்கள் 2 வருடங்கள் வரை காத்திருக்கக் கூடாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

தாமதம் ஏற்பட்டால் தகவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, மின்சார வாகனங்கள் போன்ற வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் மலேசியா பின்தங்கிவிடும் என்றார் அவர்.

தொழில் கல்வி – தொழில் பயிற்சியான TVET விரைவாக மாற்றம் அடைய வேண்டும்.

அப்போதுதான் மலேசியா தன் சொந்த நிபுணர்களை உருவாக்கி, வெளிநாட்டு தொழிலாளர்களின் மீது சார்ந்திருப்பதை குறைக்க முடியும் என பிரதமர் சொன்னார்.

ஜோகூர், பெங்கெராங்கில் மத்திய அரசாங்கத்தின் RM100 மில்லியன் செலவில் 2030-க்குள் திறக்கப்படும் தொழிற்பயிற்சி கல்லூரியின் நிர்மாணிப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்த போது அன்வார் அவ்வாறு சொன்னார்.

360 மாணவர்களுக்கு எண்ணெய் & எரிவாயு திறன்கள், வெல்டிங், ஹைபிரிட் மற்றும் மின்சார வாகன அமைப்புகள், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் அக்கல்லூரி பயிற்சி அளிக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!