
வாஷிங்கடன், செப்டம்பர் 26 – வானத்தில் திடீரென்று ஏறக்குறைய 100 நட்சத்திரங்கள் மாயமாக மறைந்த சம்பவம் வானியல் நிபுணர்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
2019ஆம் ஆண்டில் வெளிவரத் தொடங்கிய இந்த நிகழ்விற்கு, இதுவரை தெளிவான விடையம் கிடைக்கவில்லை.
அதிநவீன மென்பொருளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி குழு 100 நட்சத்திரங்கள் குறைந்திருப்பதைக் கண்டறிந்தது.
ஒரு நட்சத்திரத்தின் ஒளி மங்கலாம் அல்லது அது வெடிக்கலாம். ஆனால், இந்த நட்சத்திரங்கள் தடையமே இன்றி வானத்தில் மாயமாகியுள்ளன.
எனினும், காணாமல் போன பொருள் ஒரு சிறுகோள் என்ற ஆராய்ச்சி குழு முன்னதாக முன்மொழிந்திருக்கிறது.
அதேவேளையில், நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமான ஒளியை வெளியிடும் ஒரு சூப்பர்நோவா (supernova) எனப்படும் நிகழ்வில் வெடிக்கவில்லை என்றும், மாறாக ஒரு கருந்துளைக்குள் மறைந்துவிட்டன என்றும் கூறியிருக்கின்றது.