Latestமலேசியா

புத்ராஜெயாவில் தேசிய தின அணிவகுப்பில் 14,000 பேர் பங்கேற்பு

புத்ராஜெயா – ஆகஸ்ட் 31-ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் இவ்வாண்டுக்கான தேசிய தின அணிவகுப்பில் 14,010 பேர் பங்கேற்கின்றனர்.

அரசு நிறுவனங்களின் 78 வாகனங்கள், 7 அலங்கார வாகனங்கள், 116 விலங்குகள், 21 வாத்திய இசைக் குழுக்கள் ஆகியவை, 2.1 கிலோ மீட்டர் தூரத்திலான அந்த அணிவகுப்பில் பங்கேற்கும்.

JAPEN எனப்படும் தகவல் துறையின் தலைமை இயக்குநர் Julina binti Johan அதனைத் தெரிவித்தார்.

2025 தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்கள் குறித்து ஊடங்களுக்கு இன்று நடத்தப்பட்ட விளக்கமளிப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு சொன்னார்.

அணிவகுப்பைக் காண வரும் பொது மக்களின் வசதிக்காக, Presint 1, 8, 9, 18 ஆகிய இடங்களில் வாகன நிறுத்துமிட வசதி செய்து தரப்படும். அதே சமயம், 100 பேருந்துகள் மற்றும் புத்ராஜெயா ஏரி சுற்றுப் புறங்களிலிருந்து 6 நீர் டேக்சி சேவைகளும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இவ்வேளையில், அணிவகுப்பை அமர்ந்து பார்க்கும் அடுக்கு இருக்கைகளின் அளவும் இவ்வாண்டு 8,000-ரமாக உயர்த்தப்பட்டுள்ளது; கடந்தாண்டு 4,000 பேர் அந்த அடுக்கு இருக்கைகளில் அமர்ந்து அணிவகுப்பை கண்டு களித்தனர்.

12 இராட்சத LED திரைகள், 18 மருத்துவக் கூடாரங்கள், 5 சூராவ் தொழுகையிடங்கள், 200-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

இதனிடையே, ஆகஸ்ட் 30-31-ஆம் தேதிகளில் Presint 2-வில் நடைபெறும் உணவு விழா மற்றும் Riuh Merdeka நிகழ்ச்சியில் 60 ட்ரக் வாகனங்கள் பங்கேற்கின்றன; பொது மக்களுக்கான சிறப்புத் திரைப்படங்கள் திரையிடப்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன. தேசிய தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும்; இது பொது மக்களுக்கும் திறக்கப்படும்,

எனினும், புத்ராஜெயாவில் அன்றைய தினம் இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 31 மாலை 6 மணி வரை சாலைகள் மூடப்படுவதால், பொது மக்கள் முன்கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு Julina கேட்டுக் கொண்டார். இதனிடையே இன்று நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறை தலைமை இயக்குநர் Encik Mohd Amran bin Mohd Haris, மலேசிய போலீஸ் படைத் தலைவர் Dato’ Sri Mohd Khalid Ismail ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!