புத்ராஜெயா கட்டடத்தில் அமானுஷ்ய தொந்தரவு; மரத்தை வெட்டியதால் அங்கிருந்த பேய்கள் கட்டிடத்தில் புகுந்துவிட்டதா?

புத்ராஜெயா, ஆகஸ்ட்-21 – நேற்று முதல் புத்ராஜெயாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகளின் தொந்தரவு இருப்பதாக காணொளி ஒன்று வைரலாகி வரும் நிலையில், அது உண்மையென்றும், சுற்றுப்புற மரங்களை வெட்டி சாய்த்ததால் புத்ராஜெயாவில் உள்ள Parcel C கட்டடத்தில்தான் அந்த அமானுஷ்ய சக்திகளின் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த அலுவலகத்தில் தொங்க விடப்பட்டுள்ள ‘அவசரப் பாதை’ அறிவிப்புப் பலகை தானாகவே அசைவது அந்த வீடியோவில் பார்க்க முடிந்த நிலையில், கதவுகள் மூடப்பட்டுள்ளன; அறையில் ஜன்னல் கண்ணாடிகளும் இல்லை; இப்படி காற்று உள்ளே வருவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லாத போது அந்த பலகை மட்டும் தானாக அசைவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளன.
ஆனால் பணியாளர்களோ ஒன்றும் நடக்காதது போல அவர்கள் பாட்டுக்கு அவர்களின் வேலையைப் பார்க்கின்றனரா என கேள்வியும் எழுந்துள்ளன. இந்நிலையில் நிச்சயமாக அது அமானுஷ்ய சக்தியின் வேலையே என, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வட்டாரம் பீதியைக் கிளப்பியுள்ளது.
அப்பகுதியில் இருந்த மரங்கள் அந்த அமானுஷ்ய சக்திகளின் ‘வீடாக’ இருந்ததாகவும், திடீரென அவை வெட்டி சாய்க்கப்பட்டதால், அமானுஷ்ய சக்திகள் கட்டிடத்தில் புகுந்து விட்டதாகவும் அத்தரப்ப்பு கூறியுள்ளது.
அதே சமயம், அந்தத் தீய சக்தியை விரட்டுவதற்கான சடங்குகள் நடத்தப்பட ஏதுவாக, பணியாளர்களின் ஒத்துழைப்பைக் கோரும் நோட்டீஸ் ஒன்றும் வைரலாகியுள்ளது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் அமானுஷ்ய சக்தியுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.