கோலாலம்பூர், செப் -29,
கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி
புத்ரா ஹைட்ஸ்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் அது தொடர்பான தீவிபத்தைச் தொடர்ந்து விசாரண நடத்துவதற்காக எட்டு பேர் கொண்ட சுயேட்சை குழுவை நியமித்துள்ளது. முக்கியமான உள்கட்டமைப்பு சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுப் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு எப்போதும் முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் இயற்கை பேரிடர் நிர்வாகத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி ( Mohd Najwan Halimi ) தெரிவித்தார்.
அந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் எரிவாயு குழாய் வெடிப்புக்கான சரியான காரணத்தை விசாரணைக் குழு ஆராய்வதுடன் , சீரான நடைமுறை விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை மதிப்பீடு செய்து, மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மற்றும் மாநில அரசுக்கு முழுமையான விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்கும் என Mohd Najwan கூறினார். தொழிற்நுட்ப நிபுணர்கள் கல்வியாளர்கள் , மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் நிபுணர்களையும் உள்ளடக்கிய விசாரணைக் குழுவை சிலாங்கூர் ஆட்சிக்குழு அங்கீகரித்துள்ளது. உடனடியாக விசாரணை மேற்கொள்ளும் இக்குழு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கும் என அவர் கூறினார்.
கோலாலம்பூர், செப் 29 – கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி