
காராக், செப்டம்பர்-23 ,
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் காராக் நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் ஒருவர் மரணம் அடைந்ததோடு இதர நால்வர் காயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு தீயணைப்பு வீரர்களும் , ஒரு அதிகாரியும் கொண்ட தீயணைப்பு வாகனம் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் ( Ahmad Mukhlis Mokhtar ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பெரோடுவா Ativa , பெரோடுவா மைவி மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய மூன்று கார்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் ஹோண்டா சிட்டி காரில் சிக்கிக்கொண்ட 19 வயது பெண் கடுமையாக காயம் அடைந்ததால் உயிரிழந்ததை சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். இந்த விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க நான்கு ஆடவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.