
கோத்தா திங்கி, செப்டம்பர் 23 –
கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதியன்று கோத்தா திங்கி மெர்சிங்கில் பெண் மலாய் புலியின் சடலத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.5 லட்சம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தவில்லையெனில் மேலும் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
பெண் புலி இழப்பு இனப்பெருக்கத்திற்கு கடுமையான பாதிப்பாகும் என்று PERHILITAN பொது இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் தெரிவித்தார்.
இது கடுமையான தண்டனையாக இருந்தாலும், புலியை வேட்டையாடிய குற்றவியல் குழுக்களை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது.