ஹைதராபாத், டிசம்பர்-13, புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற போது குடும்ப மாது கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தொடர்பில், நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெரிந்தே மரணத்தை விளைவித்தல், திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல் ஆகியப் பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இது அவரது இரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அல்லு அர்ஜூன் தனது வீட்டில் கைதான நிலையில், சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்த திரையரங்க உரிமையாளர், மேலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சிக்கு அல்லு அர்ஜூன் போலீசுக்குத் தெரிவிக்காமல் திரையரங்கிற்கு வந்ததால், அவரை காண ரசிகர்கள் முண்டியடித்து ஓடியதே அச்சம்பவத்திற்குக் காரணம் என போலீஸ் கூறுகிறது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.
அதோடு படக்குழுவினரும் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவுவார்கள் என்று அறிவித்தார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நிதிமன்றத்திலும் அல்லு அர்ஜூன் மனு தாக்கல் செய்த நிலையில், இன்று கைதாகியுள்ளார்.