
பெட்டாலிங் ஜெயா, ஜன 6 – புத்ரா பூச்சோங் தொழில்மயப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் செப்டம்பர் 30 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஆன்லைன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பாலியல் பொம்மைகள் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
30 வெவ்வேறு வகைகள் மற்றும் 20 வெவ்வேறு பிராண்டுகளை உள்ளடக்கிய 18,140 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை இயக்குனர் வான் நோரிசான் வான் டவுட்
(Wan Norizan Wan Daud ) கூறினார்.
இந்த பொம்மைகள் அனைத்தும் சுமார் 800,000 ரிங்கிட் மதிப்புள்ளவை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் சுங்கத்துறையின் இறக்குமதி தடை உத்தரவின்
கீழ் இவை தடை செய்யப்பட்ட பொருட்களாக வகைப்படுத்துள்ளதாக
Wan Norizan தெரிவித்தார்.



