
பூச்சோங், ஜனவரி-7,
சிலாங்கூர், பூச்சோங், தாமான் பெரிண்டாஸ்ட்ரியன் மாஜு ஜெயாவில் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது.
காலை 6.14 மணியளவில் தீ ஏற்பட்டது.
அவசர அழைப்பைப் பெற்ற 10 நிமிடங்களுக்குள், பூச்சோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்தை அடைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
தீயில் சுமார் 40 x 80 அடி பரப்பளவு கொண்ட தொழிற்சாலையின் 80 விழுக்காட்டு இடம் சேதமடைந்தது.
32 தீயணைப்பு வீரர்கள், பல தீயணைப்பு வாகனங்களுடன் தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.



