பெய்ஜிங், டிசம்பர்-7,பூமிக்கு அருகே XA1 2024 எனும் சிறுகோள் (asteroid) வந்து விழுந்ததை சீன தொலைநோக்கு நிலையங்கள் வெற்றிகரமாகப் பதிவுச் செய்துள்ளன.
அந்த சிறுகோள் 75 சென்டி மீட்டர் சுற்றளவையும் 1 மீட்டர் நீளமும் கொண்டது.
அது முதன் முதலாக டிசம்பர் 3-ம் தேதி அரிசோனா பல்கலைக்கழக தொலைநோக்கி கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
அச்சிறுகோல் பின்னர் கிழக்கு சைபீரியா அருகே பூமி வளிமண்டலத்தில் நுழைந்து வெடித்து, பிரகாசமான தீப்பிழம்பாக மாறியது.
அக்காட்சிகளைத் தான் சீன தொலைநோக்கி நிலையங்கள் துல்லியமாகப் பதிவுச் செய்துள்ளன.
சிறுகோல் முதலில் கண்டறியப்பட்டதற்கும் அது பூமி அருகே விழுந்தற்குமான நேர இடைவெளி 12 மணி நேரங்களுக்கும் குறைவானதாகும்.
பதிவான படங்கள், பூமியில் வந்து விழும் போது சிறுகோள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த 11-வது முன்னெச்சரிக்கை என China Science Daily ஊடகம் கூறியது.
சிறுகோல்கள் பூமியை நெருங்கும் போது எச்சரிக்கைப் பெறுவதிலும், அதன் தாக்கத்தை எதிர்கொள்ளத் தயாராவதிலும் சீனாவுக்கு, இது வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.
பூமிக்கு அருகே கடந்து செல்லும் சிறுகோல்களின் அழிவுச் சக்தி நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரியதாகும்.
எனவே, அவை பூமியில் விழுந்து பேரழிவை ஏற்படுத்தும் முன்னரே அவற்றை கண்டறிந்து தடுத்து நிறுத்துவது மனிதகுலத்தின் பாதுகாப்புக்கு அவசியமாகும்.