
கோலாலம்பூர், ஆக 7 – Pulau Ketam படகு துறையில் இன்று காலையில் ஒரு பெண் மற்றும் அவரது மூன்று வயது மகளின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இன்று காலை மணி 7.30 அளவில் படகுத்துறைக்கு அருகே அவர்களின் உடல்களை பொதுமக்கள் கண்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் Kamalariffin Aman Shah தெரிவித்தார்.
இறந்தவர்களுக்கு சொந்தமான ஆவணங்களைக் கொண்ட beg ஒன்றும் அந்த படகுத்துறைக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் அறிந்து Pulau Ketam சுகாதார கிளினிக்கை சேர்ந்த ஊழியர் ஒருவர் அந்த பெண்ணும் அவரது பிள்ளையும் இறந்ததை உறுதிப்படுத்தினார்.
அவர்களது உடலில் எந்தவொரு காயங்களும் காணப்படவில்லை.
சவப் பரிசோதைனைக்காக அவ்விரு உடல்களும் கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் இதனை திடீர் மரணம் என அறிவித்த போலீசார் இதன் தொடர்பில் மேலும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.