Latestமலேசியா

பெட்டாலிங் உத்தாமாவில் 20 வயது ஜி.கவிஷாலினியைக் காணவில்லை; பொது மக்கள் உதவியைக் கோரும் போலீஸ்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-3 – சிலாங்கூர், தாமான் பெட்டாலிங் உத்தாமா, ஜாலான் PJS 1/62 எனும் முகவரியிலுள்ள வீட்டிலிருந்து, நேற்று முன்தினம் வெளியே போய் இன்னமும் வீடு திரும்பாத இளம் பெண் குறித்து தகவல் கொடுத்துதவுமாறு, பொது மக்களை போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

சம்பவத்தன்று காலை 10.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய 20 வயது ஜி. கவிஷாலினியை இதுவரைக் காணவில்லையென, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷாருல் நிசாம் ஜாஃபார் (Shahrulnizam Ja’afar) கூறினார்.

146 செண்டி மீட்டர் உயரம் கொண்ட கவிஷாலினி கடைசியாக ஜீன்ஸ் கால்சட்டை அணிந்திருந்தார்.

அவரது நெற்றியின் நடுவில் மச்சம் இருந்ததாகவும் ஷாருல் நிசாம் அடையாளம் கூறினார்.

கவிஷாலினி குறித்து தகவல் தெரிந்தோர், அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொள்ளவும்.

அல்லது விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் S பாலநாகன் சந்திரனை (Inspector Baalanaagan Chanderan) 014-8882388/ 011-31312341 அல்லது 03- 79562222 என்ற எண்களில் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!