
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14,
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில், இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் நான்காம் படிவ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குத் திருட்டுத் தனமாகக் கத்தியைக் கொண்டு வந்தவன், காலை 9.30 மணியளவில் அம்மாணவியைக் குத்தியுள்ளான்.
மற்ற சில மாணவர்களையும் அவன் கத்தியால் தாக்கியிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
சம்பவ இடத்தில் போலீஸார் மேற்கொண்டு விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பின்னர் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் முழு விவரங்கள் அறிவிக்கப்படுமென போலீஸ் கூறியுள்ளது