
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 5 – கடந்த சனிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து போலீஸ் துறையினர் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் (DOE) இணைந்து மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், 18 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 101 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஷாருல்நிசாம் ஜாஃபர் கூறியுள்ளார். இந்நடவடிக்கையில் பதிவுச் செய்யப்பட்ட குற்றங்கள் அனைத்தும் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சாலை பயனர்கள் அதிகாரிகள் நிர்ணயித்த போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஷாருல்நிசாம் கூறியுள்ளார்.