
கோலாலம்பூர், அக்டோபர் -8,
வங்சா மாஜுவில் ஒரு வீட்டில் பெண்ணைக் கற்பழித்து விட்டு, மேலும் மூவரை கட்டி வைத்த 26 வயது இளைஞன், சம்பவ இடம் விரைந்த போலீஸாருடன் மல்லுக் கட்டிய போது மூச்சுத் திணறி உயிரிழந்தான்.
நேற்று முன்தினம் மதியம் 12.40 மணியளவில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Fadil Marsus தெரிவித்தார்.
சம்பவ இடம் விரைந்த போது, சந்தேக நபர் இறைச்சி வெட்டும் கத்தியோடு போலீஸை தாக்கப் பாய்ந்தான்.
எனினும் அவனை போலீஸ் ஒருவழியாக கட்டுப்படுத்தியது; ஆனால் சில நிமிடங்களில் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு, பின்னர் அவன் மரணமடைந்தது உறுதிச் செய்யப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த நான்கு பெண்களில் ஒருவரை சந்தேக நபர் இருமுறை கற்பழித்திருப்பதும் கண்டறிடயப்பட்டுள்ளது.
அனைவரும் சிறிய காயங்களுடன் மீண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.