Latestமலேசியா

பெரிக்காத்தான் கூட்டணி தலைவர் பதவி பாஸ் வசமாகுமா அல்லது மீண்டும் முஹிடினா?

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியை அடைய பாஸ் மும்முரம் காட்டி வரும் நிலையில் அது நிறைவேறுவதில் முட்டுக் கட்டை நிலவுகிறது.

பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் அப்பொறுப்பிலிருந்து ஜனவரி 1 முதல் விலகுவதாக அறிவித்து கிட்டத்தட்ட இரு வாரங்கள் கடந்து விட்ட போதும் இன்னும் அடுத்த தலைவர் யார் எனும் குழப்பமும் சலசலப்பும் நீடித்து வருகின்றன.

 

காரணம் பாஸ் அப்பொறுப்பை ஏற்பதை பெர்சத்து உட்பட MIPP மற்றும் கெராக்கான் விரும்பவில்லை என்பதே என உள்தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சிகள் வெளிப்படையாக பாஸ் வேண்டாம் என சொல்லவில்லை என்றாலும் மலாய்க்காரர் அல்லாதவர்களும் ஏற்கக்கூடிய ஒருவரே அப்பொறுப்பை ஏற்பது பல்லின மக்களின் ஆதரவையும் தேர்தல் வெற்றியையும் உறுதி செய்யும் என்கின்றன.

அவ்வகையில் மீண்டும் முஹிடினை தலைவராக்க அக்கட்சிகள் விரும்பவதாக அறியப்படுகிறது.

 

இதனால் தான் என்னமோ முஹிடினின் ராஜினாமாவை ஏற்று புதிய தலைவரைத் தேர்தெடுக்க பெரிக்காத்தான் உச்சமன்றத்தின் அவசர கூட்டத்திற்கு ஹடி அவாங் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

 

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் நீடிக்கிறது. அவசர உச்சமன்ற கூட்டத்தை யார் தலைமையில் வழிநடத்துவது எனும் கேள்வி எழுந்துள்ளது. கூட்டணி அமைப்பு விதிப்படி உச்சமன்ற கூட்டத்தில் ஒருவரின் ராஜினாமா ஏற்கப்பட்ட பிறகே அது அமுலுக்கு வரும்.

 

அப்படி பார்த்தால் முஹிடின் இன்னும் கூட்டணியின் தலைவரே.

ஒருகால் முஹிடின் கூட்டத்தை வழிநடத்தும் பட்சத்தில் உச்சமன்ற கூட்டத்தில் உள்ள 18 உறுப்பினர்களில் பெர்சத்து, MIPP, கெராக்கானுக்கு உள்ள மொத்தம் 12 உறுப்பினர்கள் கூட்டாக அவரின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் முஹிடினே தலைவராக நீடிப்பார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஒருகால் முஹிடின் கூட்டத்தை வழிநடத்தாமல் பாஸ் தலைமையில் நடந்தாலும் கூட பெர்சத்து வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கலாம். அப்படி என்றால் பாஸ்-சுக்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும் MIPP, கெராக்கானுக்கு தலா 3 உறுப்பினர்கள் என கூட்டாக 6 உறுப்பினர்களும் உள்ள நிலையில் பாஸ் முஹிடினின் பதவி விலகலை ஏற்று MIPP-யும், கெராக்கானும் ஏற்காத பட்சத்தில் முடிவெடுக்க முடியாமல் முட்டுக் கட்டை நிலவுக்கூடும்.

 

இந்த சிக்கல்களை எல்லாம் முன்கூட்டியே பேசி தலைமை பொறுப்புக்கு அனைவரும் ஏற்கக்கூடிய வகையில் ஒரு சுமூக முடிவுக்கு வர MIPP தலைவர் புனிதன் ஹடி அவாங்கைச் சந்திக்க கடிதம் எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.

 

மொத்தத்தில் பாஸ் பெரிக்காத்தான் நேஷனல் தலைமை பதவியை அடைய பெரும் மும்முரம் காட்டினாலும்

அதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் இதுவரை இழுபறி நீடிக்கிறது.

 

அதுமட்டுமின்றி இப்பதவி தொடர்பில்தான் பெர்சத்துவுக்கும் பாஸ்-சுக்கும் இடையில் பனிப்போர் தற்போது நிகழ்ந்து வருகிறது.

 

இறுதியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைமை பதவி பாஸ் வசமாகுமா, முஹிடினுக்கே திரும்புமா, இழுபறி நீடித்து கூட்டணி முறியுமா எனும் கேள்வியே தற்போது அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!