
பிரிஸ்பன், மே-31 – இணையத்தில் கெட்ட மற்றும் கொச்சை வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்களில் மலேசியர்கள் உலகளவில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மலேசியர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் 0.019 விழுக்காடு கெட்டவார்த்தையாக உள்ளன.
ஆஸ்திரேலியா, பிரிஸ்பனில் உள்ள குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் 20 நாடுகளை உட்படுத்தி, இணையத்தில் 1.7 பில்லியன் வார்த்தைகள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், அமெரிக்கர்களே இணையத்தில் அதிகளவில் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் எழுதும் வார்த்தைகளில் 0.036 விழுக்காடு கெட்டவார்த்தை அல்லது ஆபாச அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
0.025 விழுக்காட்டுடன் இரண்டாமிடத்தில் பிரிட்டனும், 0.022 விழுக்காட்டுடன் ஆஸ்திரேலியர்கள் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
0.021 விழுக்காட்டுடன் சிங்கப்பூர் நான்காமிடத்தையும் 0.02 விழுக்காட்டுடன் நியூ சிலாந்து ஐந்தாமிடத்தையும் பிடித்துள்ளன