
பேங்கோக், செப்டம்பர்-27,
தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் ஒரு பாலத்தின் கீழ், 72 வயது ஆண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரின் உடல் இரண்டு துண்டாக, சுமார் 3 மீட்டர் தூரத்தில் தனித்தனியே கிடந்தது.
மேலும் சில உடல் உறுப்புகள் காணாமல் போனதால், இது உறுப்பு கடத்தல் தொடர்பான குற்றச்செயலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணமடைந்தவர் பெயர் வெளியிடப்படவில்லை.
அவர் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக வீடில்லாமல் அந்தப் பாலத்தின் கீழ் வசித்து வந்தவர் என்று கூறப்படுகிறது.
போலீஸார் தற்போது மரணத்திற்கான காரணத்தையும் சந்தேக நபர்களை கண்டறியவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.