
கோலாலம்பூர், ஜனவரி-24, உள்ளூர் பேரங்காடியொன்றில், கவனிப்பாரின்றி சுற்றியக் குழந்தை தானியங்கி கண்ணாடிக் கதவை உடைக்கும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.
கண்ணாடிக் கதவைக் கெட்டியாகப் பிடிக்கும் முன், பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது, CCTV கேமராவில் தெரிகிறது.
பேரங்காடியின் பிரதான நுழைவாயிலில் குழந்தை ஓடிச் சென்று கண்ணாடிக் கதவைப் பிடித்துக் கொண்ட சிறிது நேரத்தில், கதவு திடீரென உடைந்து, கண்ணாடித் துண்டுகள் குழந்தையின் மீது விழுந்தன.
இதனால் திடுக்கிட்ட குழந்தை, அவ்விடத்தை விட்டு அலறியடித்து ஓடியது.
சம்பவத்திற்கு முன்பு வெறுங்காலுடன் ஓடிய குழந்தைக்கு, தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்ததாகக் கூறப்படுகிறது.
வைரலான வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, குறிப்பாக பொது இடங்களில், சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இச்சம்பவம் நினைவுறுத்துவதாக் கூறினர்.
அச்சிறுவனுக்கு இதுவொரு பாடம்; இனி எக்காலத்திலும் பேரங்காடிகளின் கண்ணாடிக் கதவுகளின் பக்கமே அவன் செல்ல மாட்டான் என ஒருவர் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
கண்ணாடுத் துண்டுகள் மேலே விழுந்ததில் சிறுவனுக்கு என்ன ஆனது? அவன் நலமாக உள்ளான என இன்னொரு வலைத்தளவாசி அக்கறையுன் கேட்டார்.