கோலாலம்பூர், டிச 10 – மாட்சிமை தங்கிய பேரரசர் சம்பந்தப்பட்டுள்ளதால் கூட்டரசு பிரதேசத்தின் மன்னிப்பு வாரியம் மீதான முடிவு தொடர்பாக கூடுதல் ஆணை குறித்து பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
மன்னிப்பு வாரியத்தின் தலைவராக பேரரசர் இருப்பதால் அவர் சட்டத்திற்கு உட்பட்டவர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார். மன்னிப்பு வாரியத்தில் பேரரசரின் முடிவு குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கலாமா இல்லையா என்று நான் கேட்க விரும்புகிறேன்.
எனது பதில் இல்லையென்பதுதான்.
அமைச்சர்கள் ஏன் அப்படிப் பதிலளிக்கிறார்கள், நாங்கள் அமைச்சர்கள் குழுவைக் குறிப்பிடுகிறோம், இந்த வழக்கு முடிவடையும் வரை நாங்கள் ஒரு முடிவை வழங்குகிறோம், பேரரசர் அங்கீகரிக்கும் வரை, இந்த விவகாரத்தை தொட முடியாது என்று அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம்தேதியன்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பத்தை உள்ளடக்கிய கூட்டரசு பிரதேச 61ஆவது மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பில் பேரரசரின் கூடுதல் ஆணை சம்பந்தப்பட் பின் சேர்க்கை குறிப்பு இடம்பெற்றிருப்பது குறித்து அரசாங்கத்தின் விளக்கம் என்னவென்று கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹசான் ( Datuk Seri Takiyuddin Hassan) வினவிய கேள்விக்கு பதில் அளித்தபோது அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.
நஜிப் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆணை தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு மதிப்பளிக்குமாறு பொதுமக்களை நேற்று சட்டத்துறை அலுவலகம் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பான விசாரணை ஜனவரி 6ஆம் தேதி மேல் முறையீடு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாக சட்டத்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகே எந்த கருத்தையும் தெரிவிக்க முடியும் என அன்வார் கூறினார்.