Latestமலேசியா

பேராக் சுல்தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு; மன்னிப்புக் கோரிய பாஸ் சட்டமன்ற உறுப்பினர்

ஈப்போ, செப்டம்பர்-2 – பாஸ் கட்சியின் மஞ்சோய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Hafez Sabri, பேராக் மாநில அளவிலான தேசிய தின விழாவில் சுல்தான் நஸ்ரின் ஷாவை உட்படுத்திய பாதுகாப்பு மீறல் குறித்த தனது ஃபேஸ்புக் பதிவுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஆரம்பத்தில் பெற்ற தகவலின் அடிப்படையில் தவறாக ஒருவரை அடையாளம் காட்டியதாகவும், சில நிமிடங்களில் பதிவைச் சரிசெய்ததாகவும் அவர் கூறிக் கொண்டார்.

ஆனால் “பொறுப்பற்றவர்கள்” தனது ஆரம்ப பதிவின்
screenshot-டை பகிர்ந்து, அதை இனவாத அடிப்படையில் காட்டியதாகவும் தனது போலீஸ் புகாரில் அவர் கூறினார்.

எனவே தாம் இன அரசியலை தூண்ட விரும்பவில்லை என்றும், தவறு யார் செய்தாலும் பாதுகாப்பு மீறல் ஏற்க முடியாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hafez-சின் ஃபேஸ்புக் பதிவுக்கு எதிராக பினாங்கு, நெகிரி செம்பிலான் DAP இளைஞர் பிரிவுகள் முன்னதாக போலீஸில் புகார் செய்தன.

மேடையில் சுல்தான் நஸ்ரினை நோக்கி ஓடி, அவரை பின்னாலிருந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர், 41 வயது மலாய் பெண் என்றும், ஏற்கனவே மனநல சிகிச்சைப் பெற்றவர் என்றும் போலீஸார் முன்னதாக உறுதிச் செய்தனர்.

அவர் விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வேளையில், சுல்தானை உட்படுத்திய இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பில், கட்டொழுங்கு விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளதை பேராக் போலீஸ் உறுதிப்படுத்தியது.

எனினும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் இன்னமும் பணியைத் தொடருகின்றனர்; பேராக் அரண்மனையுடன் இன்று சந்திப்பு முடிந்ததும் மேல்கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவாகும் என மாநில போலீஸ் தலைவர் Noor Hisam Nordin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!