Latestமலேசியா

MPV வாகனம் மோதி ஆடவர் மரணம்

ஷா அலாம், அக் 1- கோலா சிலாங்கூர் ,

Jalan Kelang – Teluk intan சாலையின் 52 ஆவது கிலோமீட்டரில் MPV வாகனம் ஒன்று உயர் இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிளை மோதியதால் அதனை ஓட்டிச் சென்ற தெனாகா நேசனல் பெர்ஹாட்டின் பணியாளர் ஒருவர் மரணம் அடைந்தார்.

நேற்று மதியம் மணி 1.35 அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சபாக் பெர்ணமில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வேலை செய்யும் இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த 45 வயதுடைய அந்த அந்த ஆடவர் இறந்ததாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Azaharudin Tajudin தெரிவித்தார்.

அவர் ஓட்டிச் சென்ற Yamaha MT09 மோட்டார் சைக்கிளை புரோட்டோன் Exora MPV வாகனம் மோதியது.கோலாலசிலாங்கூரிலிருந்து 56 வயதுடைய தோழியுடன் அந்த MPV வாகனத்தை 59 வயதுடைய பெண் தெலுக் இந்தானுக்கு ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

உணவகத்திற்கு செல்வதற்காக வலதுபுறம் அந்த வாகன ஓட்டுனர் திரும்பியபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளோட்டியை மோதியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக Azaharudin கூறினார். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிளோட்டி மரணம் அடைந்ததை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவத்தில் MPV ஓட்டுநரும் அதிலிருந்த பயணியும் முகத்தில் காயம் அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!