கோலாலம்பூர், நவம்பர்-15 – நாட்டில் 11,397 பொது கழிப்பிடங்களைத் தரமுயர்த்துவதற்காக கடந்த ஈராண்டுகளில் மட்டும் அரசாங்கம் 800 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவிட்டுள்ளது.
அத்தொகையானது, பொது கழிவறைகளின் தூய்மைக்காக வரலாற்றிலேயே அரசாங்கம் செய்த மிக அதிகமான செலவாகுமென வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்தார்.
பொது அடிப்படை வசதிகள் தரமாகவும் மக்களுக்கு வசதியாகவும் இருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாட்டின் வெளிப்பாடாக, ‘Tandas Awam BMW’ அதாவது மலாயில் Bersih, Menawan dan Wangi என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் அவ்வளவுப் பெரியத் தொகை செலவிடப்பட்டுள்ளது.
சுற்றுப்புறத் தூய்மை என்பது நம் அனைவரின் கடமையாகும்.
குறிப்பாக 2025 ஆசியான் நாடுகளின் உச்ச நிலை மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தவிருப்பதாலும், 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டாக அனுசரிக்கப்படவிருப்பதாலும் நாடு தூய்மையாக இருப்பது முக்கியமாகும்.
2024-ஆம் ஆண்டின் சிறந்த கழிப்பிடங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் பேசினார்.
அதில் கோலாலம்பூர் Berjaya Times Square Hotel, Sunway Carnival Mall உள்ளிட்டவை பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றன.