
வாஷிங்டன், செப்டம்பர்-23,
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 90 அடி உயரத்தில் அமைந்துள்ள “Statue of Union” ஹனுமான் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால், குடியரசுக் கட்சி தலைவர் ஒருவர் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
டெக்சஸ் மாநிலத்திலிருந்து செனட் சபைக்குப் போட்டியிடவிருக்கும் அலெக்ஸாண்டர் டங்கன் (Alexander Duncan) என்பவரே அவராவார்.
“அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடு, எனவே ‘பொய்யான’ இந்து கடவுளின் சிலையை ஏன் அனுமதிக்கிறோம்” என X தளத்தில் அவர் பதிவிட்டார். போதாக்குறைக்கு, பைபிள் வசனங்களையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதற்கு அமெரிக்க சமூக வலைதளங்களில் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்து அமெரிக்க அறக்கட்டளையான HAF, இந்தக் கருத்துகளை “இந்துவுக்கு எதிரானதும், உணர்ச்சிகளை உரசித் தூண்டி விடுவதுமானது” எனக் கண்டித்து, டெக்சஸ் குடியரசுக் கட்சியிடம் நடவடிக்கை எடுக்குமாறு
வலியுறுத்தியுள்ளது.
டங்கனின் X பதிவில், பலர் அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம மத சுதந்திரத்தை உறுதிச் செய்கிறது என்பதை அவருக்கு நினைவூட்டினர்.
கடந்தாண்டு ஸ்ரீ அஷ்டக லட்சுமி கோயிலில் திறந்து வைக்கப்பட்ட இந்த ‘Statue of Union’ ஹனுமான் சிலை, அமெரிக்காவில் உள்ள மிக உயர்ந்த இந்து சிலைகளில் ஒன்றாகும்