Latestஉலகம்

பொருளாதார செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூப்பியா நாணயத்தை மறுமதிப்பிட இந்தோனேசியா திட்டம்

ஜாகார்த்தா, நவம்பர்-9,

இந்தோனேசியா தனது நாணயமான ரூப்பியாவை (IDR) மறுமதிப்பீடு செய்ய புதிய மசோதாவை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் நாணயத்தின் கடைசியில் வரும் பூஜ்யங்கள் நீக்கப்படும்… அதாவது, IDR 1,000 இனி IDR 1 ஆக மாறும்.

இந்நடவடிக்கை நாட்டின் பொருளாதார செயல்திறனை மேம்படுத்தி, நிலைத்தன்மையை பராமரித்து, ரூப்பியாவின் நம்பகத்தன்மையை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டது என இந்தோனேசிய நிதியமைச்சர் கூறினார்.

இந்த மசோதா 2027-ஆம் ஆண்டுக்குள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எத்தனை பூஜ்யங்கள் நீக்கப்படும் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!