“போராட்டத்தைத் தொடருங்கள், உதவி வந்துகொண்டிருக்கிறது”; ஈரானிய மக்களை ‘ஊக்கப்படுத்தும் ட்ரம்ப்

வாஷிங்டன், ஜனவரி-14-ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது.
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, “போராட்டத்தை தொடருங்கள், உதவி வந்துகொண்டிருக்கிறது” என அவர் ஈரானிய மக்களுக்கு நேரடியாக தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் தங்கள் உரிமைக்காக நிற்க வேண்டும் என்றும், “நாட்டை மீட்டெடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை தொடர்ந்தால், அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என்றும் எச்சரித்தார்.
எனினும், ட்ரம்ப்பின் பேச்சை ஈரான் கடுமையாக கண்டித்து, அமெரிக்கா உள்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது
.
ஆனால் சூழ்நிலை தொடர்ந்து பதற்றமடைந்து வருவதால், அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதே இப்போது உலகின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
ஈரானிய நாணய வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்த்து தொடங்கிய இந்த போராட்டங்கள், தற்போது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளன.
குறைந்தது 2000 பேர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.



