
போர்டிக்சன், நவம்பர்-14, போர்டிக்சனில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து மீது பொது மக்கள் கற்களை எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரைப்படையின் அடிப்படைப் பயிற்சி மையமான PUSASDA அருகே அச்சம்பவம் நிகழ்ந்தது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் 40-வினாடி வீடியோவில் தெரிகிறது.
பேருந்தின் பாதையை, சாலையோரமாக double parking முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட சில கார்கள் மறித்ததால் டிரைவர் வேகமாக நீண்ட நேரத்திற்கு ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பொது மக்கள், பேருந்து மீது கற்களை எறியத் தொடங்கினர்.
அந்த நேரத்தில், அங்கிருந்த PUSASDA படையினர் விரைவாக தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.
பேருந்தில் இருந்த மாணவர்களில் இதுவரை எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.



