Latestமலேசியா

போலி விவரங்களால் ஏம்.ஏ.சி.சியிடம் சிக்கிய சபாவைச் சேர்ந்த ஐந்து அரசு ஊழியர்கள்

சபா, செப்டம்பர் 10 – சபாவில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் பணிபுரியும் ஐந்து அரசு ஊழியர்கள், சுமார் 146,000 ரிங்கிட் மதிப்புள்ள தொகையைப் பெறுவதற்குத் தவறான விவரங்களைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தச், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுகாதார மையத்தின் 30 வயது உதவி மருத்துவ அதிகாரி உட்பட நான்கு தாதிகளையும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

முதற்கட்ட விசாரணையில், 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கூடுதல் நேர வேலை தொடர்பாகத் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது.

MACC சட்டம் 2009-யின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக சபா MACC இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

சந்தேக நபர்கள் அனைவரும் MACC ஜாமீனில் விடுவித்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி இந்த வழக்கு கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!