
தவாவ், ஜூலை 17- கடந்த பிப்ரவரி மாதம், போலி மசாஜ் சேவைகளை வழங்குவதாக சொல்லி, வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்து கொலை மிரட்டல்களை விடுத்த உள்ளூர் பெண்ணை தாவாவ் போலீசார் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
Gerik தங்கும் விடுதியொன்றில், பாதிக்கப்பட்டவர் மசாஜ் சேவைக்காக அப்பெண்ணை தொடர்புகொண்டபோது முன்னதாகவே 100 ரிங்கிட் பணத்தையும் அப்பெண்ணின் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளார்.
வாக்குறுதியளித்ததைப் போல அப்பெண் அவ்விடத்திற்கு வரவில்லை என்றும் தொடர்பு கொண்டப்போது மேலும் பணம் கேட்டுள்ளார் என்று அறியப்படுகிறது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரிடமும் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.